×

திஷாவுடன் நடிக்கும் ராசி கன்னா

தமிழில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘சைத்தான் கா பச்சா’, ‘சர்தார்’, ‘மேதாவி’, தெலுங்கில் ‘தேங்க்யூ’, ‘பக்கா கமர்ஷியல்’ ஆகிய படங்களில் நடிக்கும் ராசி கன்னா, ‘யோதா’ என்ற பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். கரண் ஜோஹர் தயாரிக்கும் இதில் இன்னொரு ஹீரோயினாக திஷா பதானி நடிக்கிறார். இதுகுறித்து ராசி கன்னா கூறுகையில், ‘நான் ‘யோதா’ அணியில் சேர்ந்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன், சந்தோஷப்படுகிறேன். இப்படம் வரும் ஆண்டு நவம்பர் 11ம் தேதி திரைக்கு வரும்’ என்றார். இந்தி வெப்தொடரில் நடிக்கும் அவர், தற்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு வேட்டை நடத்தி வருகிறார்.

Tags : Zodiac Khanna ,Disha ,
× RELATED வெளிநாட்டு மாடல் கையில் திஷா பதானியின் டாட்டூ